• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதுப்படத்தை தியேட்டரிலிருந்து பேஸ்புக் லைவ் செய்த பலே ஆசாமி..!

March 18, 2017 tamil.samayam.com

”அங்கமலி டைரீஸ்” என்ற மலையாள திரைப்படத்தை, தியேட்டரிலிருந்து பேஸ் புக் லைவ் செய்த ஆசாமியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மலையாள நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு, சமீபத்தில் அங்கமலி டைரீஸ் என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படம் வெளியான அதே நாளில், யாரோ ஒரு நபர் தியேட்டரிலிருந்து படத்தை பேஸ்புக் லைவ் செய்தார். இதனைப் பார்த்த படக்குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுமட்டுமல்லாமல், இந்த திரைப்படம் இணையத்திலும் வெளியிடப்பட்டது. இதனால் கடுப்பான விஜய் பாபு, இந்த செயல்களில் ஈடுபடுபவர்கள் கூடிய விரைவில் பிடிபடுவார்கள் என தனது பேஸ்புக் பக்கத்தில் கொந்தளித்துள்ளார்.

”நானும், எனது நண்பர்களும் அங்கமலி டைரீஸ் திரைப்படத்தின் லிங்குகளை பத்துக்கும் மேற்பட்ட இணையதளங்களில் சென்று அழித்துள்ளோம். ஆனால் அதே நபர்கள் வேறுவேறு இணையதளங்களில் இந்த வேலைகளில் மீண்டும் ஈடுபடுகிறார்கள். ஒரு நபர் என் திரைப்படத்தை தியேட்டரிலிருந்தே பேஸ்புக் லைவ் செய்துள்ளான். அதையும் நாங்கள் பேஸ்புக்கிலிருந்து நீக்கியுள்ளோம். கூடிய விரைவில் அவன் எங்களிடம் பிடிபடுவான். ” என நடிகர் விஜய் பாபு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சிங்கம்-3 படம் தியேட்டரில் வெளியான நாள் அன்றே, இணையத்திலும் வெளியிடப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க