• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரள மக்களுக்கு உதவி பொருட்கள் அனுப்பி வைத்த நடிகை சன்னிலியோன்

August 27, 2018 தண்டோரா குழு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து,100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்தது.கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 324 பேருக்கு மேலாக உயிரிழந்துள்ளனர்.பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அங்கு மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதித்தன.தற்போது வெள்ளம் வடிய துவங்கி விட்ட நிலையில் நிவாரண முகாம்களிலிருந்து மக்கள் வீடு திரும்பி வருகின்றனர்.இதனால் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை சன்னிலியோன் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு 1,100 கிலோ அரிசி,பருப்பு போன்றவற்றை லாரியில் அனுப்பி வைத்து இருக்கிறார்.மேலும்,அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,”நான் அனுப்பிய உதவிகள் மிகவும் குறைவானது என்று எனக்கு தெரியும்.அதிகம் கொடுக்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக உள்ளது” என்றுக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க