• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி – நடிகர் விஜய் சேதுபதி

August 17, 2018 தண்டோரா குழு

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வருகிறது.கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது.வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 167 பேர் உயிரிழந்துள்ளனர்.50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.தமிழ்த்திரையுலகினர் சார்பில் நடிகர்கள் கமல்,விஷால்,கார்த்தி,சூர்யா,நடிகைகள் ரோஹிணி,ஸ்ரீபிரியா உள்ளிட்ட பலர் ஏற்கனவே நிதி உதவிகள் அளித்துள்ளனர்.

இந்நிலையில்,நடிகர் விஜய் சேதுபதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

மேலும் படிக்க