• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேரள மக்களுக்கு நடிகர் தனுஷ் மற்றும் சித்தார்த் நிதியுதவி

August 17, 2018 தண்டோரா குழு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நடிகர் தனுஷ் ரூ 15லட்சமும்,சித்தார்த் ரூ 10லட்சமும் நிதியுதவி அளித்துள்ளனர்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது.கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருவதால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 167 பேர் உயிரிழந்துள்ளனர்.50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.தமிழ்த்திரையுலகினர் சார்பில் நடிகர்கள் கமல்,விஷால்,கார்த்தி,சூர்யா,விஜய் சேதுபதி,நடிகைகள் ரோஹிணி,ஸ்ரீபிரியா உள்ளிட்ட பலர் ஏற்கனவே நிதி உதவிகள் அளித்துள்ளனர்.

இந்நிலையில்,மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக முதல்வர் வெள்ள நிவாரணநிதிக்கு நடிகர் தனுஷ் ரூ.15 லட்சமும்,நடிகர் சித்தார்த் ரூ.10 லட்சமும் நிதியுதவி அளித்துள்ளனர்.

மேலும் படிக்க