• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

10 கட்டளைகளுடன் ஜோதிகாவின் காற்றின் மொழி பர்ஸ்ட் லுக் வெளியீடு

August 15, 2018 தண்டோரா குழு

ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா-வித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் படம் காற்றின் மொழி.இப்படம் கடந்த 2017-ம் ஆண்டு இந்தியில் வெளியான ’துமாரி சுலு’ படத்தின் ரீமேக் ஆகும்.

இந்த படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் விதார்த் நடித்து வருகிறார்.இந்தியில் நேகா நடித்த வேடத்தில் லட்சுமி மஞ்சு நடிக்கிறார்.போப்டா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.எச்.காஷிப் இசையமைக்கிறார்.

கடந்த ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் ஜோதிகா மற்றும் படக்குழு விரைவாக இப்படத்தை முடித்து கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜோதிகாவின் 10 கட்டளைகளோடு அடங்கிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.

அதில்,
1.உன் விருப்பம் போல் உடை உடுத்துவாயாக.
2.நீ விரும்புவதை செய்வாயாக.
3. உன் கணவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டாதிருப்பாயாக.
4.பசித்தால் முதலில் நீயே சாப்பிடுவாயாக.
5.குண்டாய் இருக்க விரும்பினால் குண்டாய் இருப்பாயாக.
6.வீட்டு பணிகளில் உன் கணவனையும் பங்கெடுக்க செய்வாயாக.
7.நீ சம்பாதித்து உன் விருப்பம் போல் செலவு செய்வாயாக.
8.உன் மனம் மறுப்பதை, ஏற்காதிருப்பாயாக
9.ஆணும் பெண்ணும் சரி சமம் என்பதை அறிவாயாக.
10.மனதில் பட்டத்தை சொல்வாயாக.

மேலும் படிக்க