• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனது மூன்றாவது படம் குறித்து அறிவித்த கார்த்திக் நரேன் !

January 10, 2018 தண்டோரா குழு

‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். அப்படம் ரசிகர்கள் மட்டுமல்லாது பல பிரபலங்கள் மத்தியிலும் பாராட்டை பெற்றது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்குநர் கெளதம் மேனனின் ஒன்றாக பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘நரகாசுரன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

அர்விந்த் சாமி, ஸ்ரேயா,சுந்தீப் கிஷன், ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்தநிலையில் விரைவில் திரைக்குவரவுள்ளது.

இந்நிலையில், தனது மூன்றாவது படம் குறித்து இயக்குநர் கார்த்திக் நரேன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் மூன்றாவது படம் எடுப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இது எனக்கு மிகவும் பிடித்த கதை விரைவில் முழுவிவரமும் வெளியிடுகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க