• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கார்த்திக்கு ஜோடியாகிறார் பிரியா பவானி ஷங்கர்

October 23, 2017

செய்தி வாசிப்பாளராக இருந்து விஜய் டிவியில் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்னும் சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் பிரியா பவானி ஷங்கர்.

அண்மையில் அதிலிருந்து விலகிய பிரியா வைபவ் ஜோடியாக ‘மேயாத மான்’ படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அப்படத்தில் நடித்த ப்ரியாவை அடுத்த திரிஷா என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில், பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்து வரும் கார்த்தி அதனை தொடர்ந்து இப்படத்தில் நடிக்கவுள்ளாராம்.

மேலும் இப்படத்தின் மற்றொரு நாயகியாக பிரேமம் படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரனும் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே தனுஷ் படமான ‘கொடி’யில் தமிழில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க