• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியன் 2 படத்திற்கான வேலைகளை துவங்கிய இயக்குநர் ஷங்கர்

August 27, 2018 தண்டோரா குழு

விக்ரமின் ‘ஐ’ படத்தை தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் 2.0 படத்தை பிரமாண்டமாக இயக்கி வருகிறார்.தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இதனையடுத்து இயக்குநர் ஷங்கர்,’இந்தியன்’ படத்தின் 2-ஆம் பாகத்தை எடுக்கவுள்ளார்.

1996-ம் ஆண்டு வெளியான இதன் முதல் பாகத்தில் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் 2 வேடங்களில் நடித்திருந்தார்.இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது எடுக்கப்படும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.இதனையடுத்து, அண்மையில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்தியன் 2 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இதிலும் கதையின் நாயகனாக கமல்ஹாசனே நடிக்கவுள்ளார்.ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.இப்படத்திற்கு ஜெயமோகன், கபிலன் வைரமுத்து,லக்ஷ்மி சரவணகுமார் மூவரும் இணைந்து வசனம் எழுதி வருகிறார்கள்.எனினும் அறிவிப்பு வெளியாகி நீண்ட நாட்களாகியும் இப்படம் குறித்த எந்த பணிகளும் நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில்,இந்தியன் 2 படத்துக்காக இயக்குநர் ஷங்கரும்,ஒளிப்பதிவாளர் ரவி வர்மனும் லொகேஷன் பார்த்து வருகின்றனர். தற்போது இந்த படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடைபெறுகிறதாம்.இதனால் விரைவில் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க