• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கலைஞர் கருணாநிதிக்கு திரை உலகம் நடத்தும் நினைவேந்தல் நிகழ்வு

August 11, 2018 தண்டோரா குழு

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்த தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும்,திமுகவின் தலைவருமான கருணாநிதி கடந்த 7ம் தேதி சென்னையில் காலமானார்.மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து கருணாநிதி நினைவிடத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள்,முக்கிய பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் திரையுலகத்தினர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் கலை இலக்கிய திரைத்துறை பிதாமகனுமான டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கு திரை உலகம் ஆகஸ்டு 13ம் தேதி திங்கள் கிழமை மாலை 5 மணி முதல் சென்னை அண்ணாசலை, காமராஜர் அரங்கில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் திரைத்துறையை சேர்ந்த அனைத்து சங்க நிர்வாகிகளும், அதன் உறுப்பினர்களும் பங்கேற்குமாறு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளது”.

மேலும் படிக்க