• Download mobile app
04 Feb 2026, WednesdayEdition - 3647
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனுஷின் மாரி 2 படத்தில் இணைந்த பிரபுதேவா!

August 1, 2018 தண்டோரா குழு

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது மாரி 2 படம் உருவாகியுள்ளது.தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார்.மேலும் வரலட்சுமி,வித்யா,கிருஷ்ணா, டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும்,இப்படத்தில் தனுஷுக்கு வில்லனாக டோவினோ தாமஸ் நடித்து வருகிறார்.இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பின் போது தனுஷிற்கு காயம் ஏற்பட்டதால் ஒரே ஒரு பாடல் காட்சி தவிர அனைத்துப் படப்பிடிப்பும் நிறைவடைந்தது.

இதற்கிடையில்,அந்த பாடல் காட்சி தற்போது படமாக்கபட்டுள்ளது.இதில் தனுஷிற்கு நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார்.இதனை தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மேலும் பிரபுதேவாவின் நடனத்தை கண்டு வியந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க