• Download mobile app
04 Feb 2026, WednesdayEdition - 3647
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உருவாகிறதா தனுஷின் மாரி 3 ?

August 11, 2018 தண்டோரா குழு

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான படம் மாரி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மாரி 2 படம் உருவாகி வருகிறது.

மாரி 2 வில் சாய் பல்லவி,வரலட்சுமி,ரோபோ ஷங்கர்,கிருஷ்ணா,டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்துள்ளனர்.யுவன் சங்கர் ராஜா இசையமைக்க,தனுஷ் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது.இதனையடுத்து ‘மாரி 2’ படப்பிடிப்பு முழுமையாக முடிவு பெற்றதாகத் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“மாரி 2 படப்பிடிப்பு முடிவுற்றது.மீண்டும் மாரியாக நடித்ததில் சந்தோஷம்.மேலும்,மீண்டும் மாரியாக நடிக்கக் காத்திருக்கிறேன்.இக்கதாபாத்திரத்தில் நடிப்பது சந்தோஷத்தை அளிக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்திருக்கிறார்.

எனினும்,மீண்டும் மாரியாக நடிக்கக் காத்திருப்பதாகத் தனுஷ் தெரிவித்திருப்பதால், “மாரி 3” உருவாக வாய்ப்புகள் அதிகம் எனத் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க