• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செக்கச்சிவந்த வானம் சிம்புவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

August 16, 2018 தண்டோரா குழு

காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’.இந்தப் படத்தில் அரவிந்த் சாமி,ஜோதிகா,சிம்பு,விஜய் சேதுபதி,அதிதி ராவ்,அருண் விஜய்,ஐஸ்வர்யா ராஜேஷ்,பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது.இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து செப் 26ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்த படத்தின் நடிகர்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன.அரவிந்த் சாமி,அருண் விஜய், விஜய் சேதுபதி,ஆகியோர்களின் போஸ்டர்களை தொடர்ந்து இன்று சிம்புவின் போஸ்டர் வெளியாக உள்ளது.அதன்படி தமிழில் சிம்புவின் கதாபாத்திரத்தின் பெயர் எத்தி என்றும் தெலுங்கில் ருத்ரா எனவும் படக்குழு அறிவித்து உள்ளது.

மேலும் படிக்க