• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழைந்த டிடி

August 3, 2018 தண்டோரா குழு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.
கடந்த வாரம் விஸ்வரூபம் 2 படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளே சென்றிருந்தனர்.

இதற்கிடையில்,பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை அவ்வபோது விருந்தினர்கள் சந்திப்பது வழக்கம்.அந்த வகையில் கடைக்குட்டி சிங்கம் படக்குழுவினர் மற்றும் பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்டோர் போட்டியாளர்களை சந்தித்தனர்.

இந்நிலையில், இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ சமீபத்தில் வெளியானது. அதில்,பிக் பாஸ் வீட்டில் கஜினிகாந்த் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஆர்யா,சதீஷ், சந்தோஷ் உள்ளிட்ட படக்குழு உள்ளே செல்வது போல காட்டப்படுகிறது.இவர்களுடன் இணைந்து தொகுப்பாளி டிடியும் (திவ்யதர்ஷினி) பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார்.

இதுமட்டுமின்றி ஆர்யா டிடியை பார்த்து இவர் தான் வைல்ட் கார்ட் எண்ட்ரி என தெரிவித்தார். இதற்கு டிடி இல்லை என மறுப்பு தெரிவித்தார்.

மேலும் படிக்க