• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழில் அறிமுகமாகிறார் அர்ஜுன் ரெட்டி நாயகன் !

December 23, 2017 தண்டோரா குழு

தெலுங்கில் இந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி. இப்படத்தில் நாயகனாக நடித்த விஜய் தேர்கொண்டா நடிப்பு அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது.

இதற்கிடையில், தமிழில் ‘அரிமா நம்பி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ஆனந்த் சங்கர். அதனைத் தொடர்ந்து விக்ரமை வைத்து ‘இருமுகன்’ படத்தை இயக்கினார். அப்படம் ரசிகர்களிடையேயும், வணீக ரீதியாகவும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதையடுத்து ஆனந்த் சங்கர் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும், அதனை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க இருப்பதாகவும் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.இப்படத்தின் கதாநாயகன் யார் என்பதில் புதிர் வைத்திருந்தார் ஞானவேல் ராஜா. இந்நிலையில், இன்று காலை இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

விக்ரமை வைத்து ‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் விஜய் தேவர்கொண்டா நாயகனாக ஒப்பந்தமாகி இருக்கிறார்.இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.மேலும், இப்படம் காதல் கலந்த ஆக்‌ஷன் படமாக இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க