• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அஜீத்திற்காக எழுதிய கதையில் அரவிந்த்சாமி – போட்டு உடைத்த இயக்குனர்!

November 16, 2017 tamilsamyam.com

வெற்றி பெற்ற ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க நடிகர் அஜீத்திடம் கால்ஷீட் கேட்டதாக கூறப்படுகிறது.

நடிகர் கார்த்தி நடிப்பில் நாளை வெளியாகவுள்ள படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இந்தப் படத்தில் கார்த்தி வித்தியாசமான போலீஸ் அதிகாரி கெட்டப்பில் நடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குனர் வினோத் இயக்கியுள்ளார். இப்படம் புதுவித கதையாக இருக்கும் என இயக்குனர் வினோத் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இயக்குனர் வினோத் ஒரு பேட்டியில் ‘சதுரங்க வேட்டை’ படத்தை பற்றி பேசிய அவரிடம் இப்பட 2ம் பாகத்தில் நடிக்க அஜீத்திடம் கேட்கப்பட்டதா என்று கேட்டதற்கு, இயக்குனர் வினோத் ஆமாம் உண்மைதான். அஜீத்திடம் ‘சதுரங்க வேட்டை 2’ படத்தில் நடிக்க கேட்டிருக்கிறோம். அப்படி மட்டும் நடந்தால் மிகவும் நன்றாக இருக்கும்’’ என கூறியுள்ளார்.

ஆனால், இந்த படத்தில் தற்போது அரவிந்த்சாமி நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார்.

மேலும் படிக்க