• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் !

August 30, 2018 தண்டோரா குழு

உயர்ந்த மனிதன் படத்தின் மூலம் பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் முதல் முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.

பாலிவுட்டின் சூப்பர்ஸ்டாராக இருக்கும் அமிதாப்பச்சன் தமிழ் திரையுலகில் ரஜினி, கமல் உள்ளிட்டோருடன் நெருங்கிய நட்பு கொண்டிருக்கிறார். தமிழில் அஜித், விக்ரம் இணைந்து நடித்த உல்லாசம் படத்தையும் தயாரித்துள்ளார். எனினும் இவர் இதுவரை எந்த ஒரு தமிழ் படத்திலும் நடித்து கிடையாது.

இந்நிலையில், தற்போது முதன் முறையாக நேரடி தமிழ் படம் ஒன்றில் நடிக்க அமிதாப்பச்சன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ள இப்படத்தை கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ் வாணன் இயக்கவுள்ளார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரஜினி வெளியிட்டுள்ளார்.
இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் எஸ்.ஜே.சூர்யா அறிவித்தார். தமிழ் மற்றும் இந்தியில் உருவாகும் இப்படத்தை சுரேஷ் கே. அண்ணன் தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 2019ல் துவங்கவுள்ளது.

எனினும் இப்படத்தின் இசையமைப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இதர நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க