• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வடசென்னையில் அமலா பாலுக்கு பதில் ஐஸ்வர்யா!

April 19, 2017 tamilsamyam.com

பிரபல இயக்குனர் வெற்றிமாறனின் கனவுப் படமான ‘வடசென்னை’ திரைப்படத்தில் அமலாபாலுக்கு பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் வடசென்னை படத்தின் கதாநாயகி இத்துடன் மூன்றாவது முறையாக மாற்றப்பட்டுள்ளார். முன்னதாக சமந்தா நடிப்பதாக அறிவிக்கபட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு காரணங்களால் அவர் விலக, அமலாபால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது அமலா பாலுக்கு தேதிகள் ஒதுக்குவதில் ஏற்பட்டுள்ளதால் அவரும் இப்படத்தில் இருந்து விலகியுள்ளார்.

இது குறித்து விளக்கமளித்த படக்குழு, ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்த சில படங்களின் பணிகள் இருப்பதால் அமலா பால் வடசென்னையில் இருந்து விலகியுள்ளார். வடசென்னை படப்பிடிப்புக்காக திட்டமிட்ட தேதிகளுடன் அமலா பாலின் தேதிகள் ஒத்துப்போகாததால் அவரால் படப்பிடிப்பில் பங்கேற்க முடியவில்லை. ஆகையால் அவருக்கு பதில் ‘காக்கா முட்டை’ ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். ஐஸ்வர்யா ஏற்கனவே தனது படப்பிடிப்பை துவங்கிவிட்டார் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் ‘வடசென்னை’ திரைப்படம் வடக்கு சென்னையின் சேரி பின்னணியில் கேங்ஸ்டர் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.

மேலும் படிக்க