• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“அஜித் மாதிரி ஒரு நல்லவரை பார்த்ததில்லை”-2.0 வில்லன் பேட்டி

January 26, 2017 tamilsamayam.com

அஜித்தை போல ஒரு நல்ல மனிதரை பார்த்ததில்லை என 2.0 படத்தின் வில்லன்களில் ஒருவரான சுதன்ஷுபாண்டே கருத்து தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்து வரும் ‘2.0’ திரைப்படம்,லைகா நிறுவனத்தால் மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.இந்த திரைப்படத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடித்து வருகிறார்.இது தவிர மற்றொரு வில்லனாக சுதன்ஷு பாண்டே நடித்து வருகிறார்.

அஜித் நடித்த பில்லா-2 படம் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முறையாக சுதன்ஷு பாண்டே அறிமுகமானார்.இதனைத் தொடர்ந்தே அவருக்கு 2.0 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில்,தனக்கும் நடிகர் அஜித்துக்கும் உள்ள நட்பு குறித்து பேசியுள்ளார்.

“பில்லா-2 படம் வெற்றிபெறாவிட்டாலும்,அந்த படம் மூலமாகத்தான் நான் பிரபலம் அடைந்தேன்.அதன் மூலமாகத்தான் 2.0 படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.எனவே இதற்காக நான் அஜித்துக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

அஜித் ஒரு சிறந்த மனிதர்.அவர் ஒரு மிகப்பெரிய நடிகர் என்பதை நான் தமிழ்நாட்டிற்கு வந்த பின்னர்தான் அறிந்து கொண்டேன்.நானும் அவரும் நல்ல நண்பர்கள்.இருவரும் ஒரே வயது என்பதால்,நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்வோம்.அவர் மும்பை வந்த போது,ஒன்றாக உணவருந்தியுள்ளோம்.அவருக்கு கார் ரேஸ் மீது மிகப்பெரிய ஆர்வம் உள்ளது.”என சுதன்ஷு பாண்டே அஜித்தை புகழ்ந்துள்ளார்.

மேலும் படிக்க