இளையதளபதி நடித்த ‘தெறி’ படத்தைத் தொடர்ந்து பிரபல இயக்குனர் மகேந்திரன் விஜய் சேதுபதி நடிக்கும் ‘சீதக்காதி’ படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இயக்குனர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் ‘சீதக்காதி’ திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் அடுத்த வாரம் துவங்கவுள்ள நிலையில், மகேந்திரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த தகவலை உறுதி செய்த இயக்குனர் பாலாஜி, இப்படத்தில் கதாநாயகன், கதாநாயகி, வில்லன் போன்ற கதாப்பாத்திரங்கள் இல்லை. விஜய் சேதுபதி ஒரு நாடகக் கலைஞர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அவரது கதாப்பாத்திரத்தைச் சுற்றி நடக்கும் விஷயங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகவுள்ளது. இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் இயக்குனர் மகேந்திரன் நடிக்கிறார். தற்போதைக்கு படத்தின் கதை பற்றி அதிகம் கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜானி’ படத்தை இயக்கிய மகேந்திரன் ‘தெறி’ திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்