• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் நயன்தாரா !

October 9, 2018

தமிழ்,தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நயன்தாரா.தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராகவும் விளங்கி வருகிறார்.இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கோலமாவு கோகிலா படம் ரசிகர்களிடம் மிக சிறந்த வரவேற்பை பெற்றிருந்தது.

நடிகைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படத்தில் நடித்து வரும் நயன்தாரா லட்சுமி,மா போன்ற குறும்படங்களை இயக்கி இருந்த சர்ஜுன் இயக்கத்தில் திகில் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தங்களுடைய மூன்றாவது படமாக தயாரிக்க உள்ளது.

இந்நிலையில்,ஐரா என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.மேலும்,திகில் படமாக உருவாகும் இப்படத்தில் நயன்தாரா முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க