• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சென்ற கார் விபத்து

May 12, 2018 தண்டோரா குழு

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சென்ற கார் நேற்று விபத்துக்குள்ளானது.

இலங்கையை சேர்ந்த ஜாக்குலின் பெர்னாண்டஸ் தற்போது மும்பையில் தங்கி நடித்து வருகிறார்.அவர் தற்போது சல்மான் கானுடன் இணைந்து ரேஸ் 3 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரேஸ் 3 திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டதால் படக்குழுவினருக்கு சல்மான் கான் அவரது விட்டில் நேற்று பார்ட்டி கொடுத்தார்.இந்த பார்ட்டியில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் படத்தில் நடித்த மொத்த நடிகர்களும் கலந்துக் கொண்டனர்.

அந்த பார்ட்டி-யை முடித்து விட்டு ஜாக்குலின் பெர்னாண்டஸ் இரவு 2:20 மணியளவில் சல்மான் கான் வீட்டிலிருந்து கிளம்பினார்.பின்னர் சுமார் இருபது நிமிடங்கள் கழித்து கார்டர் சாலையில் சென்றபோது ஜாக்குலினின் கார்,அந்த வழியாக வந்த ஆட்டோவில் மோதியிருக்கிறது.இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஜாக்குலின் பெர்ணான்டஸ்ற்கு எந்த காயமும் ஏற்படவில்லை.இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க