• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எனக்கும் என் மனைவிக்கும் சட்டபூர்வமாக விவாகரத்து கிடைத்துவிட்டது – விஷ்ணு விஷால்

November 13, 2018 தண்டோரா குழு

எனக்கும் என் மனைவி ரஜினிக்கும் சட்டபூர்வமாக விவாகரத்து கிடைத்துவிட்டது என நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால்.வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்,ஜீவா,வெண்ணிலா கபடிக் குழு,முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை எனப் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

விஷ்ணு விஷால் கடந்த 2011-ல் நடிகரும்,இயக்குநருமான கே.நட்ராஜ் மகள் ரஜினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இருவருக்கும் ஆர்யன் என்ற மகன் இருக்கிறார்.சில மாதங்களுக்கு முன்பு கணவன்,மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக்கு விண்ணப்பித்தார்கள்.இந்நிலையில் இன்று (நவம்பர் 13) இருவருக்குமே சட்டப்படி விவாகரத்து அளிக்கப்பட்டது.

இதுகுறித்து விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“நானும்,ரஜினியும் கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்கிறோம்.இப்போது சட்டபூர்வமாக விவாகரத்து கிட்டியுள்ளது.எங்களுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று உள்ளது. அந்தக் குழந்தைக்கு நல்ல பெற்றோர் ஆக இருப்பதே எங்களின் முக்கிய பொறுப்பு.அவனுக்கு சிறந்ததை நல்குவோம்.நாங்கள் சில அற்புதமான ஆண்டுகளை சேர்ந்தே கழித்துள்ளோம்.இனியும் நல்ல நண்பர்களாக வாழ்வோம்.ஒருவொருக்கொருவர் நன் மதிப்பை தருவோம்.எங்கள் குழந்தை மற்றும் எங்கள் குடும்பங்களின் நலன் கருதி எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் சுதந்திரத்தை மதிக்குமாறு வேண்டுகிறோம்”.இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க