• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

5 மாதத்தில் என்னை அறிந்தால் 2 தொடக்கம்?இயக்குனர் அறிவிப்பு!

January 20, 2018 தண்டோரா குழு

அஜித் தற்பொழுது விசுவாசம் படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தை சிவா இயக்க இருக்கிறார் படபிடிப்பு இந்த மாதத்தில் தொடங்கும் என கூறுகிறார்கள் மேலும் விசுவாசம் படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் தான் தயாரிக்க இருக்கிறது.

விசுவாசம் படத்திற்கு இசையமைப்பாளர் இன்னும் அறிவிக்கவில்லை,மேலும் அஜித்திற்கு ஜோடியாக அனுஷ்கா அல்லது தமன்னா நடிக்க இருக்கிறார்கள் இதை பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.

கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த கூட்டணி, காக்க காக்க படத்திலே இணைய வேண்டியது.

பணசிக்கலில் இருந்த கவுதமுக்கு சற்று ஆறுதல் கொடுத்த படம். தல ரசிகர்களின் ஆல் டைம் பேவரிட் ஆல்பம் ஹிட். கவுதம் மேனனையும் ஹாரிஸ்சும் மீண்டும் இனைய வைத்தார் தல.

சமீபத்தில் நடந்த சன் டீவி நேர் காணலில் கெளதம் மேனன் என்னை அறிந்தால் 2 பாகத்திற்கான இரண்டாம் பாகம் தயாராகி விட்டதாகவும் அதனை இன்னும் 5மாதத்தில் அஜித் சாரை சந்தித்து கதையை கூறுவேன் என கூறியுள்ளார்.

இதனால் தல ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அப்படி இந்த கூட்டணி இணையும் பட்சத்தில் எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் ஒரு முழு திருப்தியை கொடுக்க முடியும்.

மேலும் படிக்க