• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பலத்த போட்டிகளுக்கிடையே இந்த வாரம் வெளியாகும் 4 படங்கள்!

May 9, 2018 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த வாரம் வெள்ளிகிழமையன்று நான்கு படங்கள் வெளியாக உள்ளன.

தியேட்டர்களில் டிஜிட்டல் படங்களை திரையிட கியூப் நிறுவனம் அதிக பணம் வசூலித்தன.இதனைக் கண்டித்து மார்ச் 1ஆம் தேதி முதல் புதுப்படங்களின் ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.மேலும் சினிமா பணிகளும் தமிழகம், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தியேட்டர் அதிபர்கள் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

இதனையடுத்து படங்கள் தற்போது ரிலீஸ்-ஆகி வருகின்றன. இந்நிலையில் இந்த வார வெள்ளிகிழமை அன்று “இரும்புத்திரை” “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” “இரவுக்கு ஆயிரம் கண்கள்” “நடிகையர் திலகம்” ஆகிய 4 படங்கள் வெளியாக உள்ளன.

மேலும் படிக்க