January 7, 2019 தண்டோரா குழு
சமீபகாலமாக முக்கிய அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் பற்றிய வாழ்க்கை வரலாறு படம் அதிக அளவில் எடுக்கப்பட்டு வருகிறது. அப்படங்களுக்கும்
நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறும் படமாக எடுக்கப்படவுள்ளது.
இப்படத்தை விளையாட்டு வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கை வரலாற்றை இயக்கி தேசிய விருது பெற்ற ஓமுங் குமார் இயக்குகிறார். படத்தில் மோடி வேடத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிக்கவுள்ளார். படத்தின் ஆரம்பக்கட்ட வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து 23 இந்திய மொழிகளில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மத்திய பிரதேச முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மும்பையில் வெளியிட்டுள்ளார். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.