• Download mobile app
27 Oct 2025, MondayEdition - 3547
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

115 கிலோ எடை குறைத்த டான்ஸ் மாஸ்டர்!

July 8, 2017 tamilsamayam.com

பாலிவுட்டின் டான்ஸ் மாஸ்டரான கணேஷ் ஆச்சார்யா தன்னுடைய உடல் எடையை 85 கிலோவாக குறைத்துள்ளார்.

பிரபுதேவா நடித்த ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ் (ஏபிசிடி) படத்தில் டான்ஸராக நடித்திருப்பார் பாலிவுட்டின் கணேஷ் ஆச்சார்யா. இவர் ஜீவா நடித்த ரௌத்திரம் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். பாலிவுட்டின் டான்ஸ் மாஸ்டரான இவர் தன்னுடைய 200 கிலோ உடல் எடையால் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நிலையில் கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக ஜிம்மே கதி என்று இருந்து தன்னுடைய உடல் எடையை தற்போது 85 கிலோவாக குறைத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்

ஆச்சார்யா என்றால் முதலில் ஞாபகத்திற்கு வருவது என்னுடைய உடல் தான். அதனை மாற்றத்தான் என்னுடைய உடல் எடையை குறைக்க வேண்டும் என்று விரும்பினேன். இதன் காரணமாக நான் ஒன்றரை வருடமாக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தேன்.

மேலும், டான்ஸ் மீது எனக்கு ஆர்வம் அதிகம். பல படங்களில் டான்ஸ் மாஸ்டராக நடித்திருக்கிறேன். ஆனால், என் உடல் எடை 200 கிலோவாக இருந்தாலும் டான்ஸை விட்டதில்லை. தற்போது என்னுடைய டான்ஸ் எனர்ஜி கூடியிருப்பதாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க