• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெப்’ சீரியலில் நடிக்கும் பாபி சிம்ஹா

March 10, 2018 தண்டோரா குழு

தமிழில் பாலாஜி மோகன் இயக்கிய ‘ஆஸ் ஐ யாம் சஃபரிங் ப்ரம் காதல்’ வெப் சீரியலுக்கு நல்ல  வரவேற்பு கிடைத்தது.

வெப் சீரியலுக்கு தணிக்கை கிடையாது என்பதால், தாங்கள் நினைத்த எல்லாவற்றையும் முயற்சித்துப் பார்க்கும் ஸ்பேஸ் இயக்குநர்களுக்கு கிடைக்கிறது.

இதனால், தற்போது ஏகப்பட்ட வெப் சீரியல்கள் தமிழில் உருவாகி வருகின்றன. கவுதம் மேனன் போன்ற இயக்குனர்களும் வெப் சீரியல் தயாரித்து வருக்கின்றனர்.

அந்த வரிசையில், தற்போது பாபி சிம்ஹாவும் ஒரு சீரியலில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கிறார். ஜிகர்தண்டா’ போல பயங்கரமான வில்லனாக நடிக்கிறாராம் பாபி சிம்ஹா. பிளாக் ஹியூமர் ஜானரில் இந்த சீரியல் உருவாகிறது. ‘ஜோக்கர்’, ‘அருவி’ படங்களைத் தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த சீரியலைத் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க