• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விஸ்வாசம் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

December 29, 2018 தண்டோரா குழு

இயக்குநர் சிவா இயக்கத்தில் வீரம், விவேகம், வேதாளம் ஆகிய படங்களைத் தொடர்ந்து விஸ்வாசம் படத்தில் அஜித் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

விவேக், கோவை சரளா, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையில் பேட்ட படத்துடன் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ள விஸ்வாசம் படத்துக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. பேட்ட படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தல ரசிகர்கள் விஸ்வாசம் டிரைலர் எப்போது
வெளியாகும் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், விஸ்வாசம் படத்தின் டிரைலர் நாளை மதியம் 1.30 மணியவில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் தல ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

மேலும் படிக்க