• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஸ்வரூபம் பாடலை கமல் முன் பாடி அசத்திய ராகேஷ் உன்னி

July 3, 2018 தண்டோரா குழு

கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம் படத்தின் இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன்.இப்படத்தில் இடம்பெற்ற ‘உனைக் காணாத நாள்’ என தொடங்கும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சங்கர் மகாதேவன் பாடியிருந்த இப்பாடலை முகம் தெரியாத சாதாரண நபர் ஒருவர் தோட்டத்தில் அமர்ந்து கொண்டு அதே குரலில் மிகத்திறமையாக பாடியுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இதற்கடையில், இந்த வீடியோவை பார்த்த பாடகர் சங்கர் மகாதேவன் அந்த நபரைப் பற்றிய தகவல்களை தனக்குத் தருமாறு தனது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில்,இவரை நான் எப்படி கண்டுபிடிப்பது? இவருடன் சேர்ந்து பணியாற்ற எனக்கு விருப்பமாக இருக்கிறது. இவரைக் கண்டறிய எனக்கு உதவி தேவை எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து,இயக்குனர் விக்னேஷ் சிவன் தோட்டத்தில் அமர்ந்து பாடல் பாடியவர் மிஸ்டர் உன்னி என்று கூறி அவரின் செல்போன் எண்ணை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.விக்னேஷ் சிவனின் ட்வீட்டை பார்த்த விக்ரம் வேதா பட இசையமைப்பாளர் சாம் சி.எஸ். தனது புதிய ஆல்பத்தில் உன்னியை பாட வைக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,உலக நாயகன் கமல்ஹாசனை ராகேஷ் உன்னி சந்தித்துள்ளார். அப்போது, ‘உனைக் காணாத நாள்’ என தொடங்கும் பாடலை ராகேஷ் கமல் முன் பாடி காட்டியுள்ளார்.இப்படலை கேட்டு ரசித்த கமல்ஹாசன் அவரை கட்டி தழுவினார்.

மேலும் படிக்க