• Download mobile app
08 Dec 2025, MondayEdition - 3589
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஷால் வீட்டில் திருமணம்

August 18, 2017 tamilsamayam.com

தமிழ் திரைப்பட நடிகர் சங்கத்தலைவரான விஷாலுக்கு, விக்ரம் கிருஷ்ணா என்ற அண்ணனும், ஐஸ்வர்யா என்ற தங்கையும் உள்ளனர். இவரது அண்ணன் திமிறு படத்தில் வில்லியாக நடித்த ஸ்ரேயா ரெட்டியை கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

இந்த நிலையில் விஷாலின் கல்யாணத்தை எதிபார்த்திருந்த ரசிகர்களுக்கு அவரது தங்கையின் திருமண செய்தி கிடைத்துள்ளது. . ஐஸ்வர்யா சிங்கப்பூரில் M.B.A படித்துவிட்டு தற்போது விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தை கவனித்து வந்தார். இந்த நிலையில் ஐஸ்வர்யாவுக்கும், பிரபல உம்மிடி நகைக்கடை குடும்பத்தைச் சேர்ந்த உம்மிடி கிருத்திஷுக்கும் அடுத்த ஆண்டு திருமணம் செய்வதாக பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஐஸ்வர்யா-கிருத்தீஷ் திருமணம் வரும் 27-ம் தேதி சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள மேயர் ராமநாதன் ஹாலில் நடைபெற உள்ளது. திருமண அழைப்பிதழை கொடுக்க செல்லும் இடங்களில் எல்லாம் விஷாலின் கல்யாணத்தை பற்றியே விசாரிக்கின்றனர். ஆனால், நடிகர் சங்க கட்டிடம் திறந்த பிறகுதான் தனது கல்யாணம் என்பதில் விஷால் உறிதியாக இருக்கிறார்.

மேலும் படிக்க