• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஷாலை விமர்சிப்பதை விட்டுவிட்டு சேரன் படம் எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் – மிஷ்கின்

March 15, 2017 தண்டோரா குழு

“விஷாலை விமர்சிப்பதை விட்டுவிட்டு இயக்குநர் சேரன் படம் எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் விஷால் அணியைச் சேர்ந்த இயக்குநர் மிஷ்கின் தெரிவித்தார்.

தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் நடிகர் விஷால் கோவையில் தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்தார். தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் அவருடன் இணைந்து போட்டியிடும் இயக்குநர் மிஷ்கின், தயாரிப்பாளர்கள் ஞானவேல் ராஜா, எஸ்.ஆர். பிரபு, நடிகர்கள் உதயா, நந்தா ஆகியோரும் உடன் இருந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் மிஷ்கின், “இயக்குநர் சேரன், விஷாலைப் பற்றி தரக் குறைவாகப் பேசுவது கவலை அளிக்கிறது. விஷால் சினிமாவிற்காக மிகவும் கடுமையாக உழைக்கிறார். இயக்குநர் சேரன், தாணு போன்றவர்கள் ஆதாரமற்ற புகார்களைத் தெரிவிக்கின்றனர்.

இயக்குநர் சேரன் மூத்தவர் என்ற அடிப்படையில் அவரை நான் விமர்சிக்க விரும்ப விரும்பவில்லை. எனவே, விஷாலை விமர்சிப்பதை விட்டுவிட்டு சேரன் படம் எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

மேலும் படிக்க