• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஷாலின் அடுத்த அதிரடி திட்டம்

May 22, 2017 தண்டோரா குழு

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக விஷால், தேர்ந்தேடுக்கப்பட்டவுடன்
மத்திய அரசிடம் சில கோரிக்கைகளை முன்வைத்து நிறைவேற்றுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

அதுமட்டுமின்றி கோரிக்கைகள் நிறைவிவேற்றப்படாவிட்டால் ஜூன் மாதம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வோம் என்று கூறியிருந்தார். ஆனால், அந்த போராட்டத்தை அண்மையில் விஷால் வாபஸ் வாங்கினார். இதற்கிடையில், விஷால் தற்போது ஓர் அதிரடி அறிக்கையை ஒன்றை விடுத்துள்ளார்.

அதில் , தயாரிப்பாளர் சங்கத்தின் சார்ப்பில் ஆன்லைன் புக்கிங் இணையதளம் ஒன்று தொடங்கப்படும் என்றும் அதன் மூலம் அனைத்து திரையரங்குகளுக்கும் ஆன்லைனிலேயே டிக்கெட்டுக்கள் புக்கிங் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார். மேலும், தற்போதுள்ள இணையதளங்கள் டிக்கெட் முன் பதிவிற்கு ரூ.30 வசூலிக்கப்படுகிறது. ஆனால், தயாரிப்பாளரின் இணையதளம் ரூ.10 மட்டுமே வசூல் செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

விஷாலின் இந்த அதிரடி அறிக்கை, ஆன்லைன் புக்கிங் இணையதளங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க