• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘விவேகம்’: தல அஜித்தின் புதிய போஸ்டர் வெளியீடு

April 6, 2017 tamilsamayam.com

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விவேகம்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தொடர்ந்து 3 வது முறையாக அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ திரைப்படம் அஜித் ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை இயக்குனர் சிவா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே இயக்குனர் வெளியிட்ட ‘விவேகம்’ திரைப்பட போஸ்டரில் அஜித்தின் வலிமையான உடற்கட்டை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் இந்தியளவில் டாப் டிரண்டானது. அதைத் தொடர்ந்து வெளியான அடுத்தடுத்த போஸ்டர்களும் நல்ல வரவேற்பை பெற்றது.

அஜித், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் இணைந்து நடித்து வரும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கிறார். இதன் மூலம் விவேக் ஓபராய் தமிழில் அறிமுகமாகவிருக்கிறார். இப்படத்தின் டீசர் தல அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

மேலும் படிக்க