• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘விவேகம்’ சூப்பர் ஹிட் – பிரபல போர்பஸ் நாளிதழில் செய்தி!

August 30, 2017 tamilsamayam.com

உலகின் பிசினஸ் முன்னணி நாளிதழான போர்பஸ், அஜீத்தின் ‘விவேகம’ படம் சூப்பர் ஹிட் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

‘விவேகம்’ படத்தின் வெற்றி என்று அஜீத் ரசிகர்கள் தரப்பும், தோல்வி என்று அஜீத்தை பிடிக்காதவர்கள் தரப்பும் செய்தி பரப்பி வரும் நிலையில் உலகின் முன்னணி பத்திரிகையான ஃபோர்ப்ஸ் ஊடகமே ‘விவேகம்’ சூப்பர் ஹிட் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

‘விவேகம்’ படம் நான்கு நாட்களில் இந்திய வசூலில் ரூ.69.5 கோடி என்றும், வெளிநாட்டு வசூலில் ரூ.36.5 கோடி என்றும் மொத்தம் ரூ.106 கோடியை வசூலித்துள்ளது என்று அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.127 கோடி. இந்நிலையில் சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை மற்றும் நான்கு நாள் வசூல் ஆகியவைகளை சேர்த்தால் இந்த படம் தற்போதே லாபம் என்றும் இனிமேல் கிடைக்கும் ஒவ்வொரு ரூபாயும் தயாரிப்பாளருக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் கிடைக்கும் லாபம் என்றும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையில் இந்த படம் நான்கு நாட்களில் சுமார் ரூ.6 கோடி வசூல் செய்து ‘கபாலி’ மற்றும் ‘பாகுபலி 2’ வசூலை மிஞ்சிவிட்டதாகவும் அதிகப்படியான நெகட்டிவ் விமர்சனத்தையும் தாண்டி இந்த படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதாகவும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க