• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விரைவில் துப்பறிவாளன் 2 வெளிவரும்: விஷால்!

September 16, 2017

விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படத்தைத் தொடர்ந்து அதன் 2ம் பாகமும் உருவாகும் என்று விஷால் தெரிவித்துள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த வியாழன்று திரைக்கு வந்த படம் துப்பறிவாளன். வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய விஷாலின் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

மேலும், வழக்கமாக காதல், காமெடி என்று கலக்காமல் துடிப்பான துப்பறியும் அதிகாரியாக நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். இந்த நிலையில், இப்படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடந்தது. அப்போது பேசிய விஷால், கூறுகையில், இயக்குனர் மிஷ்கினுடன் பணியாற்றியதில் பெருமை அடைகிறேன்.

அவரது இயக்கத்தில் தொடர்ந்து பல படங்களில் நடிக்க விரும்புகிறேன். இப்படத்தைத் தொடர்ந்து துப்பறிவாளன் படத்தின் 2ம் பாகமும் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் என்று கூறியுள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், சூர்யா ஆகியோர் உள்பட பலர் 2ம் பாக படங்களில் நடித்து வரும் நிலையில், விஷாலும் அந்தப் பட்டியலில் இணைந்துவிட்டார். தற்போது விஷால் சண்டக்கோழி 2 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க