• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வியப்பில் ஆழ்த்தும் ‘பாகுபலி 2’ டிரைலர் முன்னோட்டம்!

March 13, 2017 tamil.samayam.com

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பான ‘பாகுபலி 2’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாவதையொட்டி, அதன் முன்னோட்ட வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?’ எனும் கேள்விக்கு சில நாட்களில் பதில் கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் ‘பாகுபலி 2’ திரைப்படத்தின் டிரைலர் வருகிற மார்ச் 16ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில், டிரைலரில் முன்னோட்டமாக 12 நொடி வீடியோ ஒன்றை படக்குழு இன்று காலை வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் உருவாக்கப்பட்ட இப்படத்தின் கிராபிக்ஸ் நாவல் கதை விரைவில் விற்பனைக்கு வரவிருக்கிறது. அதில் கதையில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரம் குறித்த தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, ராணா, தமன்னா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கிறது.

மேலும் படிக்க