நடிகர் விஜய்யின் பிறந்த நாளில் அஜித்தின் ‘விவேகம்’ படம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் அஜித்தின் புதிய படமான ‘விவேகம்’ முதல் பார்வை சமீபத்தில் வெளியானது. அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் அஜித் இண்டர்போல் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.
திரைப்படம் எப்போது வெளியாகும் என்று அனைவர் மத்தியிலும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் சென்னை எம்.ஜி.ஆர் திரைப்பட நகரில் படமாக்கப்பட்டு வருகிறது. அங்கு அஜித் மற்றும் விவேக் ஓபராய் மோதும் சண்டை காட்சிகள் படமாக்கப்படுகிறது.
அதையடுத்து படக்குழுவினர் பல்கேரியா செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் ரம்ஜான் பண்டிகைக்கு விவேகம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதற்காக அவர்கள் குறித்த நாளில் ஒரு சிறப்பம்சம் அடங்கியிருக்கிறது. படம் வெளியாக உள்ள ஜூன் 22ஆம் தேதி. நடிகர் விஜய்யின் பிறந்தநாள் ஆகும். அந்த செய்தி விஜய் மற்றும் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்