• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய் சேதுபதிக்கு ஜோடியான ஸ்ருதிஹாசன் – படப்பிடிப்பு துவக்கம்

April 22, 2019 தண்டோரா குழு

நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடிக்காமலே இருந்தார்.

ஸ்ருதிஹாசன் தற்போது விஜய் சேதுபதி ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். ‘இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன். இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள புதிய படத்தில்தான் ஸ்ருதிஹாசன் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

லாபம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய்சேதுபதி புரோடக்சன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7 சி.எஸ் எண்டர்டைமெண்ட் நிறுவனமும் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. மேலும், ஜெகபதி பாபு, கலையரசன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

டி.இமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ராஜ பாளையத்தில் பூஜையுடன் இன்று துவங்கியது. ’96’ படம் மூலம் த்ரிஷாவுக்கு ஒரு ரீ-என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி, இந்தப் படத்தில் ஸ்ருதிக்கும் ஒரு ரீ-என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.

மேலும் படிக்க