• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய், அட்லியுடன் மெர்சலைப் பார்த்து ரசித்த கமல்!

October 23, 2017 tamil.samayam.com

நடிகர் கமல் அவரது பிரைவேட் தியேட்டரில் விஜய் மற்றும் அட்லியுடன் மெர்சல் படத்தைப் பார்த்து ரசித்துள்ளார்.

தீபாவளியன்று வெளியான மெர்சல் திரைப்படம், வசூலில் சாதனைகளைப் படைத்து வருகிறது. இந்நிலையில், படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான வசனங்களுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதனையடுத்து, பலதரப்பினரும் மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தனர். இந்தப் பிரச்சனைக் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த கமல், மெர்சல் படம் ஏற்கனவே தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டுள்ளது. அதை மீண்டும் மறு தணிக்கை செய்ய வேண்டாம் என மெர்சல் படத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் கமலுக்கு அவரது பிரைவெட் தியேட்டரில் மெர்சல் படம் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த கமல் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். இந்த திரையிடலின் போது விஜய், அட்லி, தேனாண்டாள் பிலிம்ஸின் முரளி, ஹேமா ருக்மணி ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க