• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய்க்கு ஜோடியாகும் பேட்ட பட நாயகி அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

October 2, 2019 தண்டோரா குழு

அட்லீ இயக்கத்தில் உருவாகும் பிகில் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் நடிகர் விஜய். அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க வுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்காக கடந்த சில நாட்களாகவே விஜய்யுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வந்தது.

நேற்று முன் தினத்தில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்களுக்கு 5 மணிக்கு தளபதி 64 படத்தை பற்றின அறிவிப்பு வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது. அதன்படி விஜய் சேதுபதி, மலையாள நடிகர் ஆண்டனி வர்ஹிஸ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்தது,

இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இப்படத்தில் சாந்தனு பாக்கியராஜும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க