• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் வில்லன் இவரா ?

April 17, 2018 தண்டோரா குழு

கவுதம் மேனன் இயக்கத்தில்,விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘துருவ நட்சத்திரம்’.இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ரிது வர்மா,ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

மேலும்,மிக முக்கிய வேடங்களில் இயக்குநர் பார்த்திபன்,ராதிகா,சிம்ரன்,வம்சி,திவ்யதர்ஷினி, மாயா ஆகியோர் நடிக்கின்றனர்.பல்கேரியா,துருக்கி,அபுதாபி,இஸ்தான்புல்,ஜார்ஜியா என பல வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.ஏற்கெனவே,வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் இரண்டு ஸ்டைலிஷ் டீசர்கள் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது.

எனினும்,இப்படத்தின் வில்லன் யார் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருந்தார் கவுதம் மேனன். ஆனால்,தற்போது யார் வில்லன் என்ற விவரம் வெளியாகியுள்ளது.தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ‘திமிரு’ படத்தில் ஸ்ரேயா ரெட்டிக்கு கையாளாக நடித்த விநாயகன் தான், துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரமுக்கு வில்லனாக நடித்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
விநாயகன் மலையாளத்தில் ‘களி’,‘கம்மட்டி பாடம்’ உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க