• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரஜினியின் காலாவுடன் மோதும் ஹாலிவுட் படம் !

May 16, 2018 தண்டோரா குழு

ஹாலிவுட்டில் மாபெரும் வெற்றி கண்ட படம் ஜூராசிக் பார்க் என்று சொல்லலாம். குழந்தைகளை ஈர்த்த ஜூராசிக் பார்க் படம் 1993 – ம் ஆண்டு வெளியானது. உலகப்புகழ் பெற்ற இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இப்படத்தை இயக்கியிருந்தார். அடுத்த மாதம் வெளியாகவுள்ள ‘ஜுராசிக் வேர்ல்ட் ஃபாலன் கிங்டம்’ படத்தை அவர் தயாரித்துள்ளார்.

ஏற்கனவே நான்கு பாகம் வெளியான நிலையில் கடைசியாக 2015 – ம் ஆண்டு வெளிவந்த ஜூராசிக் வேர்ல்ட் படத்தின் அடுத்த பாகமாக வெளிவரும் இப்படம் ஜுராசிக் வரிசையில் படங்களில் 5 – வது படம் ஆகும். மேலும் இப்படம் அமெரிக்காவில் வெளி வருவதற்கு 2 வாரங்களுக்கு முன்பே இந்தியாவில் 2000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தியாவில் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ஜூன் 8 ம் தேதி ஜுராசிக் வேர்ல்ட் ஃபாலன் கிங்டம்’ திரைக்கு வர உள்ளது. அதேசமயம் ஜூன் மாதம் 7 – ம் தேதி ரஜினி நடித்த காலா படம் திரைக்கு வர உள்ளது.

காலா 7ம் தேதியும் ஜுராசிக் வேர்ல்ட் ஃபாலன் கிங்டம் ஜூன் 8-ம் தேதி வெளியாகி இரண்டு படமும் போட்டியிட உள்ளது. தமிழகத்தில் நடிகர் ரஜினி திரைப்படங்கள் வெளியாகும் பொது மற்ற நடிகர்களின் படங்கள் வெளியாவது மிகவும் குறைவு என்று சொல்லலாம்.

மேலும் படிக்க