May 18, 2017 
tamilsamayam.com
                                ரஜினி நடிக்கவிருக்கும் 161 படத்தில் வில்லனாக சமுத்திரக்கனி நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுளளது.
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஹூமா குரேஷி ஆகியோர் நடிப்பில் உருவாகவுள்ள படம் ரஜினியின் 161வது படம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 28ம் தேதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை இறுதி செய்யும் பணியில் இயக்குனர் ரஞ்சித் தீவிரமாக உள்ளார்.
தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் ரஜினி படத்தில் சமுத்திரக்கனி இந்த படத்தில் நடிப்பது மட்டும் இப்போதைக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தை தனுஷ் தயாரிக்கிறார். படம் அடுத்த ஆண்டு பொங்கலன்று வெளியாகிறது.