March 14, 2017 
tamilsamayam.com
                                இயக்குஜர் மேஜர் ரவி இயக்கத்தில் நடிகர் நிவின்பாலி நடிக்கவுள்ளார்.
இயக்குனர் மேஜர் ரவி, ராணுவ சம்பந்தப்பட்ட படங்களை இயக்குவதில் வல்லவர். மேலும் இவரது படங்களில் காதலுக்கு முக்கியத்துவம் இருக்காது. தற்போது மேஜர் ரவி மோகன்லாலை வைத்து ‘1971; பியாண்ட் பார்டர்ஸ்’ என்கிற ராணுவ பின்னணி சார்ந்த கதையை படமாக இயக்கியுள்ளார்.
இந்தப்படத்துடன் ராணுவ கதைகளுக்கு தற்காலிகமாக பிரேக் விட முடிவு செய்துள்ளார் மேஜர் ரவி. அடுத்ததாக காதல் சம்பந்தப்பட்ட படம் ஒன்றை இயக்க முடிவுசெய்துள்ளாராம்.. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் இந்தப்படத்தின் கதாநாயகனாக நிவின்பாலி நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தை மேஜர் ரவியும் ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி ஜானும் இணைந்து தயாரிக்கின்றனர்.