• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மெர்சல் படக்குழுவினருக்கு 200 தங்க நாணயம் பரிசளித்த தளபதி விஜய்!

August 2, 2017 tamilsamayam.com

மெர்சல் படக்குழுவினருக்கு 200 தங்க நாணயம் பரிசளித்துள்ளார் தளபதி விஜய்.

தெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2வது முறையாக இயக்குனர் அட்லியுடன் இணைந்து மெர்சல் படத்தில் தளபதி விஜய் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இதில், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், சத்யராஜ் ஆகியோர் பலர் நடித்து வருகிறனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் வரும் தீபாவளியன்று திரைக்கு வரயிருக்கிறது. இந்நிலையில், இன்னும் சில நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது. இதையடுத்து படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்படயிருக்கிறது.

இதற்கிடையில் வரும் 20ம் தேதி இப்படத்தின் ஆடியோ வெளியாகவுள்ளது. அதோடு, இப்படத்தின் டீசரும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், படம் வெளியாவதற்கு முன்பே, மெர்சல் படக்குழுவினர் 200 பேருக்கு 200 தங்க நாணயங்களை தங்கதளபதி விஜய் பரிசாக அளித்துள்ளார். இதற்கு முன்னதாக பைரவா குழுவினருக்கு தங்க ஜெயின், பிரேஸ்லெட் போன்றவற்றை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க