• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூன்று ஆண்டுகளுக்கு பின் ரீ- என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா

November 6, 2017 தண்டோரா குழு

மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நஸ்ரியா. நிவின் பாலியின் ‘நேரம்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து ஆர்யாவின் ‘ராஜா ராணி’, தனுஷின் ‘நய்யாண்டி’, துல்கர் சல்மானின் ‘வாயை மூடி பேசவும்’, ஜெய்யின் ‘திருமணம் எனும் நிக்காஹ்’ ஆகிய படங்களில் நடித்தார்.

கடைசியாக நஸ்ரியா நடிப்பில் வெளியான மலையாள படம் ‘பெங்களூர் டேஸ்’. அதன்பின் 2014-ஆம் ஆண்டு முன்னணி மலையாள நடிகர்களில் ஒருவரான ஃபகத் ஃபாஸிலை நஸ்ரியா திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு நஸ்ரியா எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். இதனால் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் நஸ்ரியா மீண்டும் எப்போது நடிக்க வருவார் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இதனிடையே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் நஸ்ரியா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், இயக்குநர் அஞ்சலி மேனன் இயக்கவிருக்கும் புதிய மலையாள படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளதாகவும் பிருத்விராஜ் மற்றும் பார்வதியுடன் இணைந்து நடிக்கவுள்ளதாவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க