• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதல்ல நல்லா நடிங்க..!விஜய்க்கு புத்தி சொல்லும் கமல்..!

September 27, 2017 tamilsamayam.com

விஜய் முதலில் நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்கட்டும் எனவும், அதன்பின்னர் அரசியலுக்கு வருவது பத்தி யோசிக்கலாம் எனவும் நடிகர் கமல்ஹாசன் அறிவுரை வழங்கியுள்ளார்.

தமிழக அரசியலில் நடிகர் கமல்ஹாசன் தீவிரமாக இறங்கி விட்டார். கட்சி, சின்னம், கொடி என அனைத்தையும் இறுதி செய்யும் பணிகளில் தற்போது அவர் ஈடுபட்டிருக்கிறார்.இந்த நிலையில் அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் அதிரடி பேட்டிகளை அளித்து வரும் கமல்ஹாசன், தமிழக அரசியல் தலைவர்களை கலங்கடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கமல், விஜய் அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு போட்டியாக இருப்பாரா என்ற கேள்விக்கு விஜய் முதலில் நல்ல கதையுள்ள படங்களை தேர்வு செய்து நடிக்கட்டும், அதன் பிறகு அரசியலுக்கு வருவது பற்றி யோசிக்கலாம் என்று நடிகர் விஜய்க்கு அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் இது விஜயிடம் தனியாக கூறினால், அவர் உதாசினப்படுத்திவிடுவார் என்றே ஊடகங்களின் முன் சொல்வதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

மேலும் படிக்க