• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீண்டும் ரஜினியுடன் இணையும் மணிரத்னம்..?

May 19, 2017 tamilsamayam.com

தனது இயக்கத்தில் மீண்டும் ரஜினியை நடிக்க வைக்க இயக்குநர் மணிரத்னம் முயற்சி எடுத்து வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன.

கடந்த 1991-ஆம் ஆண்டு ரஜினி மற்றும் மம்முட்டி நடிப்பில் வெளியான தளபதி திரைப்படம் மணிரத்னத்திற்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவிலும் இந்த படம் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி எப்போது இணையும் ? என தமிழ் ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் தனது படத்தில் மம்முட்டி மற்றும் ரஜினியை நடிக்க வைக்க மணிரத்னம் முயற்சி எடுத்து வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட்டையும் மணிரத்னம் தயார் நிலையில் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இருவரும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால், வரும் 2018-ஆம் ஆண்டு இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது 2.0 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ரஞ்சித் இயக்கும் படத்தில் ரஜினி நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பும் 2017-ஆம் ஆண்டு இறுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் 2018-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருவரிடமும் மணி ரத்னம் கால்ஷீட் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க