• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீண்டும் ஜோடி சேர்ந்த சிவகார்த்திகேயன் நயன்தாரா

August 10, 2017 தண்டோரா குழு

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கவுள்ளது.

இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். அவற்றில் ஒருவர் நடிகை நயன்தாரா. இன்னொருவர் குறித்த தகவல் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.ஆனால், அதற்கு முன்னர் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் துவங்கப்படலாம் என தெரிகிறது.

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்தப் படத்திற்காக பாடல்களை அனிருத் வேறு லெவலில் தர இருக்கிறாராம் என கூறப்படுகிறது.நயன்தாரா ஏற்கனவே சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க