• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கும் சாந்தனு பாக்யராஜ்

March 14, 2018 தண்டோரா குழு

மிஷ்கின் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம்  துப்பறிவாளன்.விஷால் ஹீரோவாக நடித்து வெளியான இப்படத்தில் அனு இம்மானுவேல், பிரசன்னா, வினய், கே.பாக்யராஜ், ஆன்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

துப்பறிவாளன் படத்துக்குப் பின் மிஷ்கின் தன்னுடைய சகோதரர் இயக்கிய ‘சவரக்கத்தி’ படத்தின் கதையை எழுதி, அதைத் தயாரிக்கவும் செய்தார்.அப்படத்தில் அவர் வில்லனாகவும் நடித்திருந்தார்.

இந்நிலையில், தன்னுடைய அடுத்த படத்திற்காக வேளையில் இறங்கிவிட்டார் மிஷ்கின். இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க சாந்தனு பாக்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் பணியாற்ற இருக்கும் இப்படத்தை ‘நளனும் நந்தினியும்’, ‘சுட்ட கதை’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும் படிக்க